பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை டாக்டர். இரா. இளவரசு தமிழ்த்துணைப் பேராசிரியர் மாநிலக் கல்லூரி.சென்னை-600005 ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் தென்றல் என்றோர் கிழமை இதழ் விரிந்துகொண்டிருந்தது. மொழி யறிஞர் தேவநேயப்பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் முதலியோரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவ்விதழில் கமழ்ந்து கொண்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகச் சார்புடைய பாவலர்களின் பயில்களமாகவும் அவ்விதழ் அமைந்தது. கிழமைதோறும் வரும் அவ்விதழின் வெண் பாப் போட்டிப் பகுதியில் ஏராளமானோர் எழுதிவந்தார் கன். நானும் சில வெண்பாக்களை எழுதியுள்ளேன். பாவலர் நாரா நாச்சியப்பன் அவர்களை, அந்த இதழ் வாயிலாகவே முதன் முதல் நான் அறிவேன். ஏராளமான வெண்பாக்களை அழகொளிர அவர் எழுதி வந்ததும், சுவைமிக்க பாடல்களைத் தொடர்ந்து தந்ததும் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. பாட்டுலகில் என்னைப் போன்ற வர்கள் குறு குறு நடந்தபோது இவர்பீடுநடை போட்டவர். அந்த நினைவோடு இந்தத் தொகுப்பு நூலுக்கு ஒர் அணிந் துரை எழுதுவதில் நான் அகமகிழ்கிறேன். இன்றைய இலக்கிய அரங்கில் பாடல்களைப் படிப்பவர் களைவிடப் பாடல்களைப் படைப்பவர்களே பவராக உள்ளனர். ஒரு பாவலனே மற்ற பாவலர்களின் பாடல்