பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கrடல்கள் 61 பொங்குது பால் பனி யொழிந்தது : பனி யொழிந்தது -தைப் பாவை வந்தனள் தோழியரே ! இனி யெழுந்திடும் இனி யெழுந்திடும் - நம் இல்லம் எழிலுறத் தோழியரே ! கோலம் எழுதுவீர் காலை மலர்ந்தது - புதுக் கோலங் கொண்டிடத் தோழியரே ! ஞாலம் செழித்திடப் பாலை வடித்து நீர் - எழில் நாட்டம் பெ ருக்குவீர் தோழியரே ! இஞ்சியும் மஞ்சளும் ஏலம் பருப்புடன் இனிக்கும் சர்க்கரைப் பொங்கலடி ! வஞ்சியாள் என்னைக் கொஞ்சி மகிழ்பவன் வந்தனன் நெஞ்சம் பொங்குதடி ! பாலும் பொங்குது ஊதும் சங்கொலி பாய்ந்து மங்கலம் சேருதடி ! ஆல மரமென வையம் தழைத்திட ஆயிர மங்கலம் பாடுங்கடி ! சோலைக் கரும்புடன் சூழ்ந்த சிறுவரின் து.ாய உள்ளமும் பொங்குதடி ! கால நாயகன் தேரும் திரும்பிடக் கண்டு வையகம் பொங்குதடி ! மூடப் பழமைகள் ஓடி மறைந்திட முன்னேற்றச் சங்கு முழங்குதடி ! நாடு தழைத்தது நலங்கள் கொழித்தன ! நல்லவர் வாழ்வு விளங்குதடி !