பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாச்சியப்பன் வெறிநாயைப் போல்வந்து விழுமந்த இந்தியென்ருல் வெறிநாயை அடிப்பதுபோல் விரட்டி யடித்திடுவோம் அறிவாளர் தமிழ்நாட்டில் ஆகாத இந்தி வந்தே வெறியாட்டம் போடுமென்ருல் என் கண்ணம்மா - அதை விட்டு வைத்திடவோ ? பொல்லாத இந்திக்குப் போக்கிடந்தான் இல்லையென்ருல் நல்லாரின் தமிழ்நாட்டில் நடமாட நுழைவதுவோ ? நல்லாரின் தமிழ்நாட்டில் நடமாட வருமென்ருல் எல்லாரும் சேர்ந் தெதிர்த்தே என் கண்ணம்மா - அதன் எண்ணத்தை முறிக் கோமோ ? பேயான இந்திமொழி பெரிதாக வளர்வதற்குத் துய்தான தமிழகந்தான் தோதாகப் பட்டதுவோ ? தாயான தமிழ்நாட்டில் தலைகாட்டும் இந்தியெனில் பாய்ந்தோடும் புலிபோல என் கண்ணம்மா - தமிழ்ப் படையும் கிளம்பாதோ ? வளமில்லா இந்திமொழி வளர்வதற்குத் தமிழகந்தான் களமாகக் கிடைத்ததுவோ கருத்தும் அழிந்ததுவோ களங்காணும் தமிழ்வீரர் கண்நெருப்புப் பட்டாலும் ஒழிந்து தொலையாதோ என் கண்ணம்மா - அது உயிரிழந்து போகாதோ ? - இந்திவந்த போதெல்லாம் எதிர்த் தெதிர்த்துப் போராடி வந்தவழி திருப்பிவிட்ட வண்டமிழர் பரம்பரையில் வந்தவர் நாம் என்றறிந்தும் மறுபடியும் மறுபடியும் வந்து வந்து, புகுமென்ருல் என் கண்ணம்மா - அதன் வாழ்வை முடிக் கோமோ ?