பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 65 வெஞ்சமர்க் கெழுந்த வீரத் தமிழர் வெள்ளைக் காரன் வீசி யெறிந்த நொள்ளைச் சுதந்திரம் தன்னைப் பெற்றுப் பத்தாண் டுகளும் பறந்து போயின இத்தனை காலம் என்ன நடந்தது! நாட்டில் நின்று வாட்டும் பசிப்பிணி ஒட்ட முயன்ற துண்டா? நன்கு படித்து முடித்துப் பட்டம் பெற்றுப் படிதொறும் ஏறிப் பல்லைக் காட்டி வேலைக் கலைந்து பெருது திரும்பிச் சாலையி னேரம் தளர்நடை போட்டே எதிர்கா லத்தை இருட்டாய் எண்ணி விதியை நொந்து விழிநீர் பெருக்கி த் திரிவார் நிலையைத் திருத்தத் தொண்டு புரிந்த துண்டா அரசு புரிவார்? புழுவினும் கேடாய்ப் புழுதி மண்ணில் குழந்தைகள்ோடு கூடி வாழ்ந்து தெருத் தொறும் தெருத்தொறும் திரிந்த ந்ைது வருத்தும் பசியை நிறுத்துதற் காகப் நொண்டி நடந்தும் நோயுடல் காட்டியும் அண்டி நெருங்கி அவலக் குரலிடும் மனிதப் பிறவிகள் மணிதொறும் மணிதொறும் தனி பெரு கினவே நாடான் வோரே, என்ன செய்தீர் இழிநிலை போக்க? என்ன செய்தீர் எளியவர் வாழ: நா. 5