பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தாச்சியப்பன் புத்தகம் எழுதிச் சொற்பொழி வாற்றி மெத்தப் படித்தவர் நேரு, கல்வி வித்தகர் என்று வெளிநாட் டவரின் மொத்தப் புகழையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்தவர் சொந்த நாட்டுத் தொண்டர் கருத்தை உணர்ந்தவர் ஆட்சியில் இருக்கும் போதே இந்தியை நுழைக்கும் கருத்தில் பிறக்கும் ஆணைகள் கணக்கில! நொடிதொறும் நொடிதொறும் மனிதத்தொகைதான் கொடுநஞ் செனவே கூடிப் பெருகுது வறுமையும் நோயும் வளர்ந்து பெருகுது சிறுமைத் தனமோ செழித்துப் பெருகுது நாட்டு வளத்தைப் பெருக்கித் துயரை ஒட்டி விரட்ட ஒரு திட்ட மேனும் கோட்டை யிலிருந்து கொடிபிடித் தாளும் கூட்டத் தவரே, கொண்டுவந் தீரா? நாடு நாடாய் ஓடி யிரந்து கோடி கோடியாய்க் கடனை வாங்கி வந்த ஆள்வோர் அந்தப் பணத்தால் இந்தியைப் பரப்பவே எங்கும் முனைந்தார்! தேசத்தைப் பிடித்த காச நோய்போல் நீச இந்தியை நீளப் பரப்ப அரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் வரிந்து கட்டிக் கொண்டுநிற் கின்ருர்! நாட்டவர் கருத்தைக் கேட்டறி யாமல் இந்தியைப் புகுத்தோம் என்று மொழிந்த நேருவின் உறுதியும் நிலைமாறிப் போச்சு பிரசாத் ஆகளயே பெரிதாகி விட்டது!