பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 67 அறுபத் தைந்தாம் ஆண்டில் நாடெலாம் துறை தொறும் இந்தி தொழிற்பட வேண்டுமாம். அரசிய லாரின் அலுவ லகத்தும் நெறிவழங்குகின்ற நீதி மன்றத்தும் பிறபிற துறையிலும் அறுபத் தைந்தில் குறிக்கோள் மாருது கொண்டு வந்தே இந்தியை இருத்த வேண்டு மென்றே அந்தத் தலைவர் ஆணையிட் டாரே ! வருத்தும் நோயைக் குறைக்க அறியான் மருத்துவன் எனப்பெயர் பொறித்துக் கொண்டென, குடிமக்கள் உள்ளத் துடிப்புண ராதவர் குடியரசுத் தலைவராம் கொடுமை ! கொடுமை ! ஊர்வளம் பார்க்க உருகிய நாடு சேர்ந்திரே அரசியல் தெரிந்து கொண்டீரா ? மக்கள் விரும்பி மதியா மொழியை மிக்க வண்மையாய் மேன்மேற் றினிக்கும் பழக்கம் அங்கே பார்த்த துண்டா ? கிளர்த்து வீரே ! கீழ்மனத் தோரே ! துஞ்சுபுலி இடறிய குருடன் போலே வஞ்சகரின் இந்தியொடு வந்து விழுந்தார் அஞ்சாப் புலியனைய செந்தமிழர் நாட்டில் வஞ்சகரின் மொழிபுக வழிகிடைத் திடுமோ? நெஞ்சு கொதித்து நிற்கும் தமிழர்முன் பஞ்சாய்ப் பறக்கும் பாதகர் இந்தியே ! வெஞ்சமர்க் கெழுந்த வீரத் தமிழர் முன் அஞ்சி யொழியும் அறிவிலார் இந்தியே !