பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாச்சியப்பன் இந்த உயிரென்ன பெரிதா? (ஆனந்தக் களிப்பு மெட்டு) நேற்றுப் பிறந்திட்ட தென்றே - கற்ருேர் நிந்தித் திடுமோர் இந்தியின் நிலையைச் சாற்றத் துணிந் திட்டேன் கேளிர் - நமக்குச் சஞ்சலம் தருமந்த வஞ்சக மொழியே ! இந்தியக் கண்டத்தில் எங்கோ - மூலை இருட்டில் கிடக்கின்ற குருட்டுக் கிழவி இந்தி மொழியென்று சொன்னல்- அதில் எள்ளளவேனும் தள்ளுதற் கில்லை ! வள்ளுவர் குறள்போல் ஒரு நூல் - அந்த வளமற்ற இந்தியில் உளதென்று சொன்னல் உள்ளத்தில் வேற்றுமை யின்றி - நாம் ஒன்ருகச் சேர்ந்ததை நன்முகக் கற்போம் ! தொன்மைச் சிறப்பில்லை எனினும் - புதிதாய்த் தோன்றிய இலக்கியச் சான்றுகளுண்டா ? தன்மை சிறிதேனும் இன்றி - அதை நாட்டில் புகுத்துதல் கேட்டினை விளைக்கும் ! இந்தி மொழியாளர் வாழும் - அந்த இடமெல்லாம் தன்ருகக் கொடிகட்டி விடட்டும் செந்தமிழ் நாட்டினில் இங்கே - ஆட்சி செலுத்த நினைத்திட்டால் வலுத்தானே குறையும் !