பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாச்சியப்பன் களைப் படிப்பதில் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை. பாடல்களை வெளியிட நூல்வெளியீட்டாளரும் தயங்கு கின்றனர். இந்தச் சூழலில், பாடல்நூல் வெளியிடுவதற்கு அதுவும் ஏறத்தாழ முந்நூறு பக்க அளவில் வெளியிடுவதற் குத் தனித்துணிவு தேவை. அத்துணிவை மிகப்பெற்று இந் நூலைக் கொணர்ந்துள்ள பாவலரைப் பாராட்ட வேண்டும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல காலத்தன. பெரியோர் ஈ.வே. ராவின் எழுபதாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்தையும் (பக். 217), அவர் மறைந்த பிறகு பாடிய பாடல்களையும் (223) இத்தொகுப்பில் காண் கிறோம். ஏறத்தாழ முப்பதாண்டு கால இடைவெளியில் மலர்ந்தவைகளே இப்பாடல்கள் எனலாம். பா ட ல் மலர்ந்த காலக் குறிப்பு ஆங்காங்கே தரப்பட்டிருப்பின் பாவலரின் வளர்ச்சிப் போக்கைக் கணித்தறிய ஆய்வாளர் களுக்குப் பயன்பட்டிருக்கும். பாடல்கள், தமிழ், தமிழர், தமிழ்நாடு, இயற்கை, காதல், சான்றோர், பகுத்தறிவு, நூலாக்கம் எனப் பல பொருள்களைப் பேசுகின்றன. தமிழை, உலக முதன்மொழியாகக் கருதும் (பக்.1) பாவலர் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்து அறிவியல் முதலிய அனைத்தையும் தனித் தமிழில் கூறவேண்டும் (24, 28) என்பதோடு, கோயில் முதலிய பல இடங்களில் வேற்று மொழிகள் இடம்பெற்றிருப்பதைக் கண்டு (40, 52) வருந்துகின்றார். 'போற்றிசெயும் கோயிலிலே, பாட்டுப் பாடும் புலவர்களின் அரங்கத்தே, அறமன் றத்தே, ஆற்றல்பெறும் கல்லூரிக் கூடம் தன்னில் அரசுபணிச் செயலகத்தே, திரும ணத்தே