பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாச்சியப்பன் அன்றும் அடிமையடா-நீ இன்றும் அடிமையடா. ஒர் இந்தி மொழிக் காரன் ஒரு தமிழனப் பார்த்து இவ்வாறு பழிக்கிருன்: அடிமைப் படப் பிறந்தாய் - உனக்கு ஆள்கின்ற நினைப் போடா? குடியர சாட்சியிலே - உனக்குக் கூடப் பங்கோடா? ஆங்கிலத்தைப் படித்தே - நல்ல அடிமை யாகிவிட்டாய் தீங்குளதோ மேலும் - இந்தி தெரிந்து கொண்டு விட்டால்? அன்றும் அடிமை யடா - நீ ஆங்கில வெள்ளையர்க்கே! இன்றும் அடிமை யடா - நீ இந்தி மொழியினர்க்கே! மான முனக் கிருந்தால் - இந்தி வருமுன்னே தடுத்திருப்பாய்! ஈனத் தமிழா நீ - இன்று என்ன செய்திடு வாய்? ஆட்சி அதிகாரம் - படை ஆதிக்க முனக் குண்டா? சூழ்ச்சி தவிர்ப்பதற்கும் - உனக்குச் சொந்த அறிவுண்டோடா?