பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 73 ஒழிக. இந்தி யென்றே - நீ உரக்கக் கூச்சலிட்டாய்! ஒழிந்து போய் விடுமா? - சட்டம் உன் கையில் உள்ளது வா? தில்லியில் இருப்பவரே - எங்கள் தெய்வ மெனத் தொழுதாய் சொல் வது கேட்டிடுவாய் - உனக்குச் சொந்த மொழி வேண்டாம்! இந்தி படித் திடுவாய் - நான் இந்தியன்' என்று சொல்வாய். சொந்தத் தமிழ் மொழியை - குப்பையில் துக்கி எறிந்திடுவாய்! தமிழைப் படித்தவர்க்கு - வேலை தருமோ அரசாங்கம்? இமைப் போதும் தாழ்க் காதே - இன்றே இந்தி படித் திடுவாய்! இந்தி தெரி யாதவர்க்கு - வேலை இல்லை யென்ற சட்டம் முந்தி வந்து விட்டதடா - தமிழ் மூடனே அறிந்திடுவாய்! எத்தனை தடவைகள் நீ - எங்கள் இந்தியை எதிர்த்திடுவாய்? ஒற்றுமை யற்றவனே! - வெறும் உணர்ச்சி என்ன செய்யும்?