பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 75 மொழிப் பற்றுனக் கெதற்கோ? - போர் முழக்கம் தானெதற்கோ? விழிப்புற் றென்னசெய்வாய்? - அடிமை! வீண் கூச்சல் தவிர்த் திடுவாய்! ஆளவந்த எங்கள் - இருகால் அடியைத் தொழுது நிற்கும் மோழைத் தமிழ் மகனே - வாய் மூடிக் கிட போடா! கூச்ச விடுவாயேல் - நெஞ்சைக் குண்டால் துளைத் திடுவோம் வாய்ச் சம்பம் பேசி நின்ருல் - சிறையிட்டு வாட்டி வதக் கிடுவோம். ஊர்வலம் வந்துவிட்டால் - இந்தி ஒழிந்து போய்விடுமா? தேர்வலம் வந்தாலும் - இந்தி திரும்பிப் போய் விடுமா? அடிமைத் தமிழ் மகனே! - விணே ஆணவம் கொள்ளாதே! குடியைக் கெடுக்காதே - இரத்தம் கெட்டி மடியாதே ! இந்திய நாட்டுக்கெல்லாம் - எங்கள் இந்தி பொது மொழியாம் வந்த சட்டந் தன்னை - இனி மாற்ற முடியாதே !