பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பாடல்கள் தமிழன் இந்திக்காரனிடம் கூறும் பதில் நெஞ்சிலே வஞ்சகம் நினைப்பவர் உறவின் நீங்குவோம் எதையும் தாங்குவோம்! கொஞ்சமும் நேசம் கொள்ளாதவர் நட்பிலே கூடவோ துன்பம் தேடவோ? ஆலையும் தொழிற் சாலையும் வடக்கே ஆக்குவீர் நலம் தேக்குவீர்! சேலையும் நெய்ய நூலையும் கொடாமலே சிறுவீர் நியாயம் மீறுவீர்! ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லியே ஒதுக்கினர் உள்ளம் கொதிக்குதே! உற்ற தமிழர்தாம் உம்கா லடிக் கீழ் ஒழிவதோ சிக்கி அழிவதோ? செந்தமிழ் நாட்டில் இந்தி புகுத்துதல் சீர்மையோ என்ன நேர்மையோ? சொந்த மொழியிற் பேசவும் உரிமை கொடுக்கிலீர் இது அடுக்குமோ? சிங்கத்தைக் கூட்டில் அடைத்தாலும் வீரம் சிறுக்குமோ மனம் பொறுக்குமோ? சங்கத் தமிழைக் காக்கத் துணிந்தவர் சாய்வரோ பயந் தோய்வரோ? குண்டுக்குப் பயந்து கொண்ட கொள் கையில் குலைவுருேம் என்றும் கலைவுருேம் அண்டிக் கெடுக்கும் இந்தியை ஒட்டாமல் அயர்ந் திடோம் - எதற்கும் பயந்திடோம்!