பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாச்சியப்பன் இந்திக்கு வழிகாட்டு சிங்கக் குட்டியே! சிறுத்தைப் புலியே! செந்தமிழ் நாட்டு வீரக் காளை யே! சிந்தனை என்னுமோர் தென்றல் வீசில்ை செந்தமிழ் நாட்டுச் சிறுமையும் பெருமையும் மனக்கண் முன்னல் வந்திடக் காண்பாய். முதலில் உன் பெருமை முழுக்கச் சொல்வேன் அதுகேட்டுத் தோள் பூரிப்பாய்! ஆனல் சிறுமை கேட்ட நொடியி லேயே கிறுத்தைப் புலியது சீறு வதைப்போல் துடிதுடித்துக் கிளம்ப வேண்டும் தெரியுமா? இமயத் துச்சியில் புலிக்கொடி பொறித்தவர் குமுறி ஆரியப் படையினைக் கடந்தவர் மனம் போன போக்கில் தமிழைப் பழித்த கனக விஜயராம் ஆரியர் சுமக்க இமயத்துக் கல்லைக் கங்கை நீ ராட்டிக் குமரியில் சேர்க்கக் கொண்டு வந்தவர் சேர சோழ பாண்டியர் அன்னர் வீர மரபிற் பிறந்தவனே உன் பாட்டன் காலத்துப் பெருமை எல்லாம் கேட்டுக் கேட்டுப் பூரித்தாய் அல்லவா! அந்தப் பெருமைக்கும் இந்தநாள் சிறுமைக்கும் எடைபோட்டுப் பார் எத்தனை வேற்றுமை? வெள்ளைக் காரனை வெளியேறச் சொல்லி உள்னே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டோம். வெற்றி பெற்ருேம் விடுதலை யுற்ருேம் இதுதான் உண்மையென்று இசைபாடி ஞயே