பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

asni-sessor 11 கூற்றுவரும் இழவகத்தே கூட உன்னைக் கூடாமற் செய்துவிட்ட கோலங் கண்டு நேற்றுவரை போராடிப் போரா டித்தான் தெஞ்சுறுதி பெற்றுவரு கின் றோம் தாயே! (52-53) எனப் பாவலர் குறிப்பிடுவது எண்ணத்தக்கது. இந்தி. வடமொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வல்லாண்மையி லிருந்து தமிழைக் காப்பாற்ற வேண்டும் எனும் பாவலரின் விழைவு போற்றத் தக்கது. ஆங்கிலமொழி வல்லாண்மை யால் தமிழுக்குற்ற கேட்டினைப் (37, 38, 50, 51, 82, 83) பாவலர் குறிப்பிடுவது தனித்துச் சுட்ட வேண்டிய சிறப் பாகும். தமிழர்கள் உரிமை உணர்வின்றி உள்ளத்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களே, இவ்வடிமைநிலை வழி வரும் தமிழர்களையும் வீழ்த்தி விடுமே எனப் பாவலர் துன்பப்படுவதை, "உடலடிமைப் பட்டாலும் உள்ளத் துள்ளே ஊறிவரும் உரிமையுணர் விருக்கு மானால் கெடலில்லை யம்மனிதன் அழிந்தாலுந்தன் கீழ்வருமோர் பரம்பரையார் வீரங்கொண்டு அடிமைநிலை மாற்றுதற்குப் போராட் டங்கள் ஆயிரமா யிரமாகச் செய்து வெற்றிக் கொடிபறக்கச் செய்வரிது மெய்யே; உள்ளம் கொள்ளுகின்ற அடிமைநிலை துன்பம் அம்மா! (51) எனும் எண்சீர் விருத்தம் தெளிவாக உணர்த்துகிறது. முன்னோரைத் தழுவி மூவேந்தர் பெருமையை (12) இவர் பேசினாலும் இந்திய நாட்டு வரலாற்றில் பண்டையோர் தொட்டு, கட்டபொம்மன், வ.உ.சி. வரை யிலான பலரும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள இழி நிலையை எவரிடம் போய்ச் சொல்வது! (14) எனும்