பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 79 சந்தேக மில்லையென்று சதிராடி ஞயே கொஞ்சம் மூலையில் குந்தி யிருந்து நெஞ்சைத் தொட்டு நீ நினைத்துப் பாரப்பா. அஞ்சாது தில்லியில் அரசாளு கின்றவர் ஆணை யிடுகிருர் அனைத்திந்தி யாவிலும் இந்தி மொழியே இருக்க வேண்டுமாம் செந்தமிழ் நாட்டுச் சந்துபொந் தெல்லாம் இந்திக்குப் பள்ளிகள் எழுப்பச் சொன்னர் அரசியல் மன்றம் அனைத்திலும் இந்தியே உரைசெய வேண்டுமாம் உத்தர விட்டாரே பேரொலி எழுப்பும் நீராவி வண்டி நிற்கும் இடத்திலும் நெஞ்ச முவக்கக் கற்கும் நூலிலும் கடித உறையிலும் நாணயத் தாளிலும் இந்திப் பெயரே கானு கின்ருேம் வேறு நாட்டார் யாரும் வரினும் வரவேற் போரின் சீருடை மொழியால் வரவேற் பளித்தல் கூடா தென்ருர் இந்திதான் கூடுமாம் வாடா திருக்குமோ வண்டமிழ் மொழியே சங்கம் வளர்த்த தண்டமிழ் நாட்டில் எங்கும் இந்தியை வளர்ப்ப தென்முல் செந்தமிழ் நாட்டுச் செல்வ மெல்லாம் தேய்ந்து தேய்ந்து சல்லியா காதோ ! எழுத்தும் பேச்சும் இந்தியில் வந்தால் பழுத்த செந்தமிழ்தான் பயனுடைத் தாமோ ? கொம்பை நாடிடும் கொடிபோல் தீம்பால் செம்பைத் துரக்கிச் சிற்றடி வைத்து