பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாச்சியப்பன் நடந்து வருந்தன் நாயகி யோடு கிடந்து மகிழ்ந்தே இன்புறு வேளையில் அன்பே அமுதே அழகே என்று நம் இன்பத் தமிழில் இசைவதை நிறுத்தி பியாரி என்றும் பிரியே என்றும் தியானம் இந்தியில் செய்கெனச் சட்டம் ஆக்கினும் ஆக்குவர் அது வியப் பில்லையே ! தூக்கிய வாளென முறுக்கிய மீசை இளைஞனே உன்றன் இரத்த நரம்புகள் புடைக்க வில்லையா பொன்மலைத் தோள்கள் துடிக்க வில்லையா துாய்தான நெஞ்சு பொங்க வில்லையா போர்க்கொடி ஏந்துவாய் சங்கத் தமிழை வளர்க்கத் துணிவாய் வந்த வழியே திரும்பச் சொல்லி இந்திக்கு வழிகாட்டு எழுந்திரு தோழனே !