பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 83 அயலார் மொழியென்ருல் ஆத்திரம் ஏன்கொண்டாய் தோழி? அயலார் மொழி நம்மை அடிமைப் படுத்தலால் தோழா ! முன்னேற முடியாமல் முத்தமிழ் நின்றதேன் தோழி? அன்னிய மொழிகளின் ஆதிக்கம் ஓங்கியதால் தோழா ! அன்னிய மொழியான ஆங்கிலம் போய்விட்டால் தோழி? இன்று புதிதாக இந்தி நுழையுதே தோழா! ஒற்றுமை இந்தியால் உண்டாகும் என்கிருர் தோழி? மற்றவர் உணர்ச்சியை மதியாதார் கூற்றிது தோழா ! உறவுக் கொருமொழி உண்மையில் வேண்டாமோ தோழி? வெறிகாரர் கட்டாய உறவை விரும்பாதே தோழா! வெறிகாரர் என்று நீ விளம்புவ தேனேடி தோழி: நெறியற்ற முறைகளில் நீசத் தனம்புரிந்தார் தோழா ! நீசத் தனமென்ன நிகழ்ந்தது சொல்லேடி தோழி? பேசினால் இந்தியில் பேசென்று கல்லெறிந்தார் தோழா ! தாய்மொழி பேசாரைத் தண்டித்தல் தவருேடி தோழி? போய்ப்பேசி நின்ருேர்க்குப் புரியாத மொழியது தோழா ! இப்போதே வெறியாட்டம் இத்தனை என்றிட்டால் தோழி? தப்பாமல் பின்னலே சர்வாதி காரந்தான் தோழா? இந்தி வெறியாளர் எண்ணம் நிறைவானல் தோழி: செந்தமிழ் ஓங்கச் சிறிதும் இடமில்லை தோழா ! வெறிப்போக்கைத் தடுக்கும் விதமென்ன சொல்லடி தோழி: நெறியாகப் போராடி நிறுத்துதல் காணென்றன் தோழா ! அடக்கு முறையை அவிழ்த்து விடுவாரே தோழி? துடிக்கு முணர்ச்சிக்குத் துன்பம் பெரிதில்லை தோழா ! சீறி யெழுவோரைச் சிறையில் அடைப்பாரே தோழி: ஊறிப் பெருகும் உணர்ச்சியைத் தடுப்பாரோ தோழா !