பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாச்சியப்பன் குண்டும் தடியடியும் மண்டை பிளக்குமே தோழி? தண்டமிழைக் காப்போர்க்குக் குண்டு மலர்ச்செண்டு தோழா! கையிழந்து காலிழந்து கவலைப் படநேரும் தோழி? மெய்யிழந்து போனலும் மேன்மைத் தமிழ்சிறக்கும் தோழா ! உயிர்ச் சேதம் கூட உண்டாகக் கூடுமடி தோழி! உயர் தமிழைக் காப்போர்க் குயிரும் பெரிதல்ல தோழா ! பண்டைத் தமிழ்வீரர் பண்பை எனக்களித்தாய் தோழி! வண்ணத் தமிழ்காக்க வாழ்வைப் பயன்படுத்து தோழா ! சொல்லில் உணர்ச்சியினைத் தோய்த்துத் தருகின்ருய் தோழி! வெல்லத் தமிழ்காக்க வேங்கையெனப் போராடு தோழா ! இந்திப் பகையொழிக்க இதயம் துடித்ததடி தோழி! சொந்தத் தமிழ்காக்கத் துள்ளிப் புறப்படுவாய் தோழா ! அண்ணு குரல்கேட்டே ஆர்த்தெழுந்து விட்டேனடி தோழி! பண்ணுர் தமிழ்காக்கப் பாய்ந்து புறப்படுவாய் தோழா ! போர் முழக்கம் கேட்டவுடன் புத்துணர்ச்கி கொண்டு விட்டேன் தோழி! வீரத் தமிழ்காக்க விரைந்து புறப்படுவாய் தோழா ! புல்லர்களின் இந்திமொழி போக்கித் தமிழ் காப்பேன் தோழி! வெல்க தமிழ்! வெல்க தமிழ்: வெற்றி பெறுக நீ தோழா ! வெறியாளர் இந்திமொழி வீழ்த்தித் தமிழ் காப்பேன் தோழி! அறிவாளர் தமிழ் வாழ்க! அழியாத புகழோங்க! தோழா ! சனியான இந்திமொழி சாய்த்துத் தமிழ் காப்பேன் தோழி! இனிதான தமிழ் வாழ்க! இசையோடு நீவெல்க! தோழா!