பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 85 பிற மொழி கோயிலிலே பிறமொழியில் வணக்கமது கூறு கின்ற தீயவொரு வழக்கமிந்தத் தமிழ்வழங்கும் திருநிலத்தில் ஆயதன்றி வேறினத்தார் நாடுகளில் ஆட்சி செய்து மேயதனைப் பார்த்ததில்லை எனமொழிவள் மேதினித்தாய்! இனியதுவாய் இருக்கிறந்ே தமிழ்மொழியில் இசையே யில்லை எனமொழியும் சூழ்ச்சிதனைப் போய்மொழிவ தெவரிடத்தில்? மனமெனவொன் றிருக்கிறதோ? அலதவர்தாம் மாசு மிக்க இனப் பகையால் தமிழழிக்கும் கொடுஞ்செயலில் இறங்கி ேைரா? அரசியற்குப் பிறமொழியை ஆதரித்தல் அடிமை யுள்ளம் இரப்பதனைப் போலு மன்ருே? தமிழகத்தின் இளைஞர் காள் நும் திருவுளத்தில் இருக்குமெனில் இதுகருத்தைத் தீய்த்து விட்டிங் கரியணையில் தமிழணங்கை உயர்த்திமகிழ் வடைவிர் நீரே! பிறமொழியைக் கற்பதனால் அடிமையுளம் பெறுவ துண்டால் பிறமொழியை மக்களெலாம் கற்கவெனப் பேசு கின்ருர் சிறகொடித்துப் புதுச்சிறகு கொள்க வெனச் செப்பி, மக்கள் திறமை யெலாம் பறித்துப்போம் கொடியமனத் தீய ராமே! பிறமொழியில் இலக்கியங்கள் கற்றவையே பெரிதென் றெண்ணிச் சிறப்பிலையே தாய்மொழியில் எனமொழியும் தீயரெல்லாம் திறமையிலாப் பேடிகளாம்! அயல் மொழியாம் தீயில்iழ்ந்த விறகுகளாம்! குப்பைகளாம்! எனச்சினந்து விளம்புவேனே!