பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாச்சியப்பன் எங்கள் நாடு ஆரமுதாம் செந்தமிழே அன்னையெனக் கொண்டு அந்தமிழே வாழ்கவென ஒலிமுழக்கித் தொண்டு சேர வுழைத் தெதிர்வருமோர் இந்திமுத லான செயலற்ற வட மொழிகள் புதைகுழியே காண ஆருயிரே போமெனினும் அச்சமதை நீத்தே ஆர்வத்தால் துடித்தெழுந்து செந்தமிழைக் காத்த வீரதால முத்து நடராசர் முத லானேர் விளங்கிய செந்தமிழ் நாடெங்கள் நாடே! செந்தமிழை இகழ்ந்தவனைச் சேர்ந் தெதிர்த்துக் கொல்வோம் சிறிதளவும் அயராமல் உடன் சென்று வெல்வோம் என்றுமொழிந் திழிகனக விசயரெனும் பித்தர் எங்கள் தமிழ்க் கண்ணகிக்குச் சிலைசுமக்க வைத்துச் சந்தி தெருச் சிரிக்கவைத்த திறனுடையான் சேரன் சளையாமல் வடமலையில் புலிபொறித்த சோழன் முந்தி தமிழ் காத்த பெரும் பாண்டியனர் ஆட்சி முறை கண்ட செந்தமிழ் நாடெங்கள் நாடே! அறப்பெரியார் ஈவேரா சொல்லாட்சி கண்டு ஆர்வமுடன் தன்மான உரிமை எண்ணங் கொண்டு மறத்தமிழர் அண்ணுவே தளபதியாய் இன்று மாண்புடனே அணிவகுக்கப் படையினராய் நின்று திறற்கவிஞன் கனகசுப்பு ரத்தினத்தின் பாட்டைத் தெரு வெல்லாம் முழக்கிவந்து சூழ்ச்சியினல் கேட்டை உறப்புரிவார் வாலொடுக்கி ஓடிடவே கண்டு உளமகிழும் செந்தமிழ் நாடெங்கள் நாடே!