பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகலவன் வரவு பகலவன் வரவு பார்த்துப் பனியனு மகன்று போகப் புகலிடம் அறியா தங்குப் பொசுங்கினன் இரவு மன்னன்! அகன்றனர் பகைவ ரென்று மேகத்தின் அரச னிங்குத் திகழ்ந்திடும் காட்சி தன்னைக் கான நீ வாராய், தம்பி! பச்சைதல் லாடை பூண்டு பனித்துளி வயிரம் கோத்த கச்சையை யணிந்தி ருந்த கண்ணகல் ஞால மங்கை, இச்சையைக் காட்டி யந்த எழுங் கதிர் அழகிற் பட்டுக் கச்சையை யிழந்த காட்சி காண நீ வாராய் தம்பி! வருகவே எங்கள் வீட்டுள் வந்துநின் ஒளியை எற்குத் தருகவே தருக வென்று தரைதனில் நீர் தெளித்துப், பெருகிய குப்பை நீக்கிப் பெண்களும் கோல மிட்டு வருகிற கதிரை யேற்றல் வந்துநீ பாராய் தம்பி!