பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாச்சியப்பன் செங்கதிர் வரவு தோக்கிச் செவ்விதழ் கூப்பி நின்ற மங்கைநற் பங்க யத்தாள் மலர்முகம் திறந்து காட்டி அங்கவன் கதிரை வீச ஆவலாய்த் தழுவிக் கொள்ளும் மங்கலம் பொலியும் காட்சி வந்து நீ பாராய் தம்பி! இருளினைக் கடந்து வந்த இளங்கதிர் பரப்பும் வெய்யோன் வரவினைக் கண்ட தண்ணிர் வாழ்த்துமா றலைக்கை நீட்டிக் குரலினை யுயர்த்தி யுள்ளம் குளிரவே பாட்டுப் பாடி வரவினை யேற்கும் காட்சி வந்துநீ பாராய் தம்பி! வானத்தில் எழுந்த பந்தின் வரவினை வண்டி னங்கள் தாம் கண்டு கொண்ட தாலே தலை சுற்றத் தேன் குடித்தே ஏனென்று கேட்ப தற்கோ எவருமிங் கில்லை யென்று தேனுாறும் தமிழி சைத்துத் திரிவதைப் பாராய் தம்பி ! கதிரவன் வரவு கண்டு காரிருள் போன பின்னர் உதிர்ந்திடா வெண்முத் தென்ன ஒளிரும்விண் மீன்களெல்லாம்