பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாச்சியப்பன் பாவலரின் வருத்தம் சரியானதே. தமிழ் நாட்டைப் பற்றிப் பாடுகிற போது, 'அன்றும் இன்றும் என்றும் தமிழே ஆளுந் தமிழ் நாடே!” (30) "வகுத்த நெறியில் வழுவா திருக்கும் பண்புத் தமிழ் நாடே 1: (31) "தோழமை யாலே ஏழைமை மாய்த்துச் சுடரும் தமிழ் நாடே!" (32) எனக் குறிப்பிடும் பகுதிகள் பாவலர் எதிர்பார்க்கும் தமிழ் நாட்டைக் காட்டுகின்றன. இருக்கும் தமிழ் நாட்டைத் 'தமிழ் வளர்கிறது’ எனும் பாடல் (33) அழகாகப் படம் பிடிக்கிறது. 'தமிழினை வளர்ப்போ மென்றும் தமிழர்நா டடைவோ மென்றும் அமிழ்தென மொழிவோ ரெல்லாம் அவரவர் கொள்கை கொண்டு சுமைசுமை யாகத் தீமை தோற்றுவித் திடுதல் கண்டேன்' (34) "அரைப்படிப்புக் காரரெல்லாம் தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார்! திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார்! உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால் ஒதுங்குகின்றார்; நூற்பொருளில் திருத்தம் சொன்னால் கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார்! காண்பதெல்லாம் விந்தைகளே! தமிழர் நாட்டில் (33) போன்ற பாடற் பகுதிகள் நடப்புநிலைத் திறனாய்வாக அமைகின்றன. வடவரின் பிடியினின்றும் வளர்தமிழ் நாட்டை மீட்கத் திரளும் படையினில் தன்னையும்