பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 89 மதிக்கவே செய்யா ரிந்த மான்விழிப் பெண்களென்றே அதிர்ந்துபோய் ஒளியும் காட்சி அதிசயம் பாராய் தம்பி ! இருளிலே கிடந்து வாடி இருந்தஇச் செடிகள் எல்லாம் வருந்துமோர் ஏழ்மை யாளன் வாடிய முகந்தன் முன்னர் பொருள் மிகக் கண்ட போது பூரிக்கும் எழில் நிகர்க்கும் திருவினை விளைக்கும் பூக்கள் திகழ் வித்தல் பாராய் தம்பி ! தாமரைக் குமரி காதலன் வந்த களிப்பில் தனது கைகளை விரித்துக் கதிரைத் தழுவி முகமிக மலர்ந்து முத்தமும் வாங்கி அகமிகக் குளிர்வள் அரசிளங் குமரியே ! வண்டுக் காதல் மாலை நேரம் சோலைப் பக்கம் போனே னங்கே பொன்வண் டொன்று காதலி பூவைக் கட்டித் தழுவி அவள்தன் வாயின் அமுதம் பருகி முத்த மிட்டுச் சித்தம் நீங்கி இருந்த எழிலே என்னென் பேனே!