பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாச்சியப்பன் மழை ஒளிர் வெயில் மறைந்திருந்த ஒருபோதிற் காட்டுப் பக்கம் குளிர் தரும் காற்று வந்து குப் பென்று வீசி நிற்க, விழுந்தது மழையின் தூற்றல் விண்ணெலாம் ஆர வாரம் எழுந்தது மேகம் மின்னி இடித்தது சிங்கம் என்ன ! வையத்திற் கமுத மாக வந்திடும் மழையைக் கண்டு செய்யதம் உள்ள மாரச் செடிகளும் கொடிகள் மற்றும், வெய்யவன் கொடுமை மாற்ற விளங்கிடும் மரங்கள் தாமும், கையெனத் தளிர்கள் நீட்டிக் களித்திடும் சீர்த்தி யென்னே மண்ணிலே புதைந்தி ருந்தோம் மற்றுநின் வரவு கண்டோம். எண்ணிலா மகிழ்வ டைந்தோம். இளிது நீ வாழ்க வென்று, வெண்ணிலா வரவு கண்டு விரியுமோர் அல்லி போன்று தண்ணிரில் தவளை யெல்லாம் தாளப்பாட் டிசைத்த வம்மா !