பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் §3 அழகு மழை கழுவித் தெருவை தூய்தாக்கிக் கழனி வாழ்வைப் புதிதாக்கிப் பொழியும் அழகு மழையேநீ புவிக்குத் தீமை புரியாயே! பளிங்குப் பாறைத் துகள்போலே பஞ்சு வட்டத் துளியாகி இறங்கி வருமுன் எழில்கான என்றன் ஆசை என்னென்பேன் மேலே இறைவன் இருந்திந்த மேதினி ஆளும் உண்மைசொல நீல வானத் திருந்திங்கே நீயும் வந்து விழுகின்ருய் ! தல்லார் பொல்லார் எல்லார்க்கும் நண்ணி நெருங்கும் அவனென்றே மெல்ல மெல்லக் கீழ்வீழ்ந்தே மேவி வருவாய் மழையே நீ பெரிய கோளப் புவியின்மேல் பெய்யும் மழையே நீயிறைவன் உரிய அன்பை எனக்குத்தான் உணர்த்து வதகனக் காண்கின்றேன்