பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 95 அவிழ்ந்த கூந்தல் பாலொளி வீசும் இரவினிலே - ஒரு பக்கத்து மேடையில் போயமர்ந்தேன் காலனைப் போலொரு மேகத்துள்ளே - மதி கலந்து மறைந்தது கண்டிருந்தேன் மேலும் ஒளிவிடும் மீன்சிலதை - அந்த மேகம் மறைத்தது கண்டவுடன், "சால ஒளிவிடும் வைரங்களை - உன் சால்வையிற் கோத்துள வானரசி, கோல அழகுடை அன்னவற்றை - உன் கூந்தல் மறைப்பது காண்கிலையோ ? பாலினைப் போலொளிர் மேனிதன்னை - அவை பழுப்புறச் செய்வ தறிகிலேயோ ? பேசடி ' என்று நான் சொன்னவுடன் - அவள் பெரிதாய் இடித்து முழக்கிநின்று மாசுடைக் கூந்தல் அவிழ்த்துவிட்டாள் ! - நான் மழையில் நனைந்து திரும்பி விட்டேன்