பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாச்சியப்பன் து து (நடுராத் திரியில் நாரை யொன்று விழித்தே எழுந்து வெளியைப் பார்க்க நிலவின் அழகில் நெஞ்சம் நீந்தக் களிப்புடன் சிறகை விரித்துப் பறக்கவும் அதனை நோக்கித் தாமரை சொல்லும்! நிலவின் ஒளியில் நீந்திச் செல்லும் நாராய் நாராய் அழகிய நாராய் என் சொல் யாவும் கேட்டுப் போவாய் பகலவ னிருக்கும் பட்டணம் போனல் பகர்வா யவனிடம் 'பகலவா அந்தப் பருவப் பெண்உன் மருவற் கிழத்தி பங்கய மங்கை சங்கதி யொன்று கூறுவே னப்பா குறிப்பாய்க் கேள் நீ நிலவின் ஒளியால் நெஞ்சம் எரிய மதனன் அம்பு மார்பில் தைக்க வாடையுங் குளிரும் நின் வரவின் தினைவும் வாட்டி வதக்கிக் கூம்பச் செய்து விட்டன என்று வேறெது மில்லையே!