பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 நாச்சியப்பன் மாறும் முடி துயில்வது நீங்கிப் பயில்வது வேண்டி மயிலின் மாதர் மஞ்சம் அகல விடிந்தது விடிந்தது வீட்டில் இன்பம் என்றெல் லோரும் இயம்பி யார்க்க உறக்கம் என்னும் ஒர்நிலை யகற்றி எழுச்சி யென்னும் இன்பம் பயக்கும் செங்கோ லாட்சிச் செங்கதிர் வேற்கள் எங்கும் பரப்பி இன்ப மார்க்கும் காலை என்னும் கனிவு மிகுந்த மன்னவர்க் கென்ன மாமுடி ஒன்றை அன்பால் இயற்கை யளித்தாள் கண்டீர்! அன்பெனக் கல்லால் அடித்தது போல இயற்கை யளித்த இக்கொடும் ஞாயிறு" தலையில் வந்து தருக்கி யமரக் காலை மன்னரும் கம்பி நீட்டினர்1 நடுப்பகல் அண்ணன் தடுங்கா வீரன் 'கொடுமுடி எங்கே கொடுத்துவிடிங்'கெனக் கடுத்துக் கூறி எடுத்தே யணிந்தான். எடுத்தவ னணிந்த இருநா ழிகையில் "சுட்டது போதும் விட்டுவி டென்னக் கொட்ட மடங்கிற் றித்தொடு போதும்' என்று நடுங்கி யிறக்கிளுன் முடியை!