பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 13 சேர்த்துக் கொண்டதாகப் பாவலர் குறிப்பிடுவது (33) அவரின் கடந்த காலச் சார்பு நிலையைச் சுட்டுகின்றது. 'மிகுந்தநலம் ஒருவர் உற நாட்கள் தோறும் மேனியெலாம் கருமையுற வேர்வை ரத்தம் உகுத்திடுக ஒருவரென்று மன்றில் சட்டம் உண்டாக்கி வைத்தபெரும் சண்டா ளர் யார்?' (42) என வினா எழுப்பி, "வண்ணானின் சேயையொரு வண்ணா னென்று வகுத்துவிட்ட மடையர்களைப் பெரியோ ரென்றே அண்ணாந்து பார்க்கின்ற அறிவற் றோரே” (43) எனச் சாடி, "...இந்த நாட்டில் அழுதொருவன் இருக்கும்வரை விடுதலையை அடைந்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும் கூப்பாடே! (43) எனத் தெளிவுபடுத்தி, 'அனைவருக்கும் பொதுவிந்த உலக மென்ற நேரியதோர் கொள்கையினைத் தமிழர் நாட்டில் நிலைக்க வைத்தால் யாவருக்கும் விடுதலைதான்!”(44) என வழி காட்டுகின்றார். பொதுமை நெறியில் உண்மை யான விடுதலையும், உரிமை வாழ்வும் கிடைக்கும்-நிலைக் கும் என்பதைப் பாவலர் கண்டு காட்டுவது பாராட்டத் தக்கது. இயற்கையைப் பற்றிப் பாடும் பாவலர் எரிக்கும் வெயில் பற்றி எப்போதோ பாடிய பாடல் இவ்வாண்டின் கோடை வெயிற் கொடுமையைத் தேக்கி நிற்கின்றது. 'எடுத்து வைக்கும் அடியில் சுட்டாய் தலையும் கொதிக்க வைத்தாய்