பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 99 மேலைக் கோபுர வாயிற் காத்து மலையில் வாழும் மாலை மன்னன் 'மாமுடி எங்கே? தா, அடி இங்கே’’ என்றுதன் காதலி 'இயற்கை யழகை' விளித்து வேண்டி ஒளிமுடி வாங்கி ஒளித்துக் கொண்டான் உயர்மலைப் பின்னே! மலையில் ஒளித்த மாமுடி தன்னைக் குளிர்புனல் சிந்தும் அருவியி லிட்டுத் 'தண்ணில வாக்கித் தலையிற் சூடிக் கடற்கரை வந்தான் காதல் அழகன்! இயற்கை யழகி இரவாய் மாற அவளுட் கலந்தே யவன்மறைந் தானே!