பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நாச்சியப்பன் அழகு மங்கை வாள்சுற்றிப் போர்செய்யும் பகைக்கஞ் சாத வன்னெஞ்சப் போரேற்றின் தினவெ டுத்த தோள்சுற்றும் வேகத்தில் துடிது டித்துத் தோன்றியதோர் அழகுதனைக் கண்டேன்! அந்த வாள்மின்னும் மின்னலிலும் கார்மே கம்போல் வரும்யானைக் கூட்டத்தும், பவழம் போலத் துாள்தாளாய்க் கதிரொளியில் மின்னும் ரத்தத் தோய்வினிலும் சிரித்தவன்தான் தோன்றக் கண்டேன்! வையத்தில் இருக்கின்ற பொருளி லெல்லாம் வானத்தில் ஒளிர்கின்ற மீனி லெல்லாம் தையலர்கன் மீனக்கண் ஒளியி லெல்லாம் தானகத் தோன்றியவள் கவிதை தந்து, செய்யதிருப் பாக்களிலே நடம் புரிந்து சிறுகுழந்தை புன்னகைப்பில் மின்னலாகிப் பெய்திருக்கும் மழைநீரில் ஓடி வந்து பெருமகிழ்வால் சிரித்தபடி பேசு கின்ருள்! செந்நெல்லின் பச்சையிலே சேர்ந்து கொண்டாள் சேற்றுக்குள் தாமரையாய் வளர்ந்து நின்ருள் புன்னகையின் ஒளிதன்னைப் போர்த்துக் கொண்டாள் பூரித்து நிற்கின்ருள் மாம் பழத்தில்! அன்னத்தில் வெண்மைநிற மாகத் தோன்றி அதுபடைத்த தளிர்வாழை தன்னிற் சேர்ந்து சின்னக்கொவ் வைக்கனியிற் சிவந்து தோன்றிச் செம்பவழந் தன்னிலவள் சிரிக்க லாள்ை!