பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 101 காலயிலே கடல்மீது தோன்று கின்ற கதிரவனின் செவ்வொளியில் மிதந்து வந்தாள் சாலையிலே நடுப்பகலில் மரத்தின் கீழே சரிந்திருக்கும் நீழலிலே ஒட்டிக் கொண்டாள். மாலையிலே வானத்தின் செங்க ளத்தில் வழிந்திருந்த குருதியிலே மின்னித் தோன்றிச் சோலையிலே நிலவுவந்து பாலை பள்ளித் தெளித்தவுடன் சிரித்துவிட்டாள் அழகு மங்கை! வானத்து மீன்களிலே கண்சி மிட்டி வருகவென அழைக்கின்ருள், அணுகும் போது கானத்துத் தளிர்மேனி தழுவத் தந்து காதலினை வளர்க்கின்ருள்! முல்லைப் பூவில் நீமுத்தம் தாவென்று நெட்டு யிர்த்து நெடுநாளாய் எதிர்பார்த்த செல்வத் தோடு சீனத்துக் கப்பல்வரும் கடல் நுரையில் சிரிக்கின்ருள் எக்களித்துக் குதிக்கின் முளே! தூரத்துப் பச்சையிலே காட்சி தந்தாள் துள்ளிவரும் மான்முதுகில் புள்ளி யாளுள்! பூரித்துத் தோன்றுகிருள் காலிக் கூட்டம் புற்றரையில் மேய்கின்ற போது நெஞ்சம் ஆரத்த ழுவுகின்ருள் தென்ற லாகி அலையடித்து நுரை யெழுப்பிப் பாயும் ஆற்றின் ஒரத்துக் கரைகளிலே மலர்ந் திருக்கும் ஒளிவண்ணப் பூக்களிலே சிரிக்கின் ருளே!