பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நாச்சியப்பன் பாடுக வண்டே! ஆடுக வண்டே ஆடி ஆடிப் பாடுக வண்டே இன்பப் பண்ணில் பாடுக காதற் பாட்டே! இன்பக் கள்ளெனப் பாடுக காதற் பாட்டே! ஆடி யிறக்கை அடித்தடித்துந் பாடிக் காற்றில் பறக்கும் வண்டே! பாடுக காதற் பாட்டே! உள்ளங் கனிவுறப் பாடுக காதற் பாட்டே! செம்மலர் உன்றன் சிறகடித்தல் கண்டு விம்மிப் பூரித்து விரிக்கும் தன்னிதழ் ஓடி யின்ப ஊற்றில் திளைத்துப் பாடுக காதற் பாட்டே! உள்ளங் களிப்புறப் பாடுக காதற் பாட்டே! விரிமலர் உன்றன் விழைவை யெழுப்பப் பருவங் காட்டிநின் வரவுபார்த் திருக்கும் உன்னிசை வுறுதல் உளங்கொண் டன்பால் தன்னுடை நெகிழ்க்கும் தளிர்க்கும் உடலே!