பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தாச்சியப்பன் அழகான மயில் அழகான மயிலொன்று ஆடுதுபார் நங்கையே! அதோ பார்! கண்ணைக் கவரும் வண்ணமடி-அது கால்பின்னி ஆட்டம் போடுதடி எண்ணத்தில் மிகுந்த இன்பமே-அதை இப்படி யாட்டிப் படைக்குதடி! அதோ பார்! மேகத்தைக் கண்டு மயிலாடும்-போது மேனியெங்கும் விழி யாகும் தோகையில் தான் எத்தனை வண்ணம்-நொடி தோறும் நெஞ்சிலின்பம் சேரும்! v. பாட்டில் லாமல் அது ஆடும்-ஒரு பாதி தானடி குறைச்சல் மீட்டிடு வாய் உன்றன் குரலை-மிக நன்ரு யிருக்குமடி நங்காய்! காடும் மலையும் வானும்-தென்றல் காற்றில் மிதப்பது போலே ஆகுமடி யுன்றன் பாட்டும்-மயில் ஆடும் அழகுமொன்று சேர்ந்தால்!