பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 105 வட்ட நிலா வட்ட நிலா வட்ட நிலா வானத்திலே பார் பட்டப் பகல் போல் வெளிச்சம் பரவுவதைப் பார் உருட்டிவைத்த வெண்ணெய்தான் ஒடியதோ வானில் இருட்டையெல்லாம் விலக்கிவிட்டே எழுந்தது.பார் ஆகா! வாழ்வினிலே முன்னேற்றம் காணவரு வார் போல் சூழிருட்டைக் கிழித்து வரும் முழு நிலவு பாராய் தம்பிகையில் வைத்திருந்த வெள்ளையப்பம் தானே எம்பிப் போய் உயரத்தில் எழுந்ததுவே நிலவாய். வான் கடலில் மிதந்துவரும் பணிக்கட்டி மலையோ தேனிலவின் குளிர்ச்சியினைத் தேர்ந்தறிந்து சொல்வாய் தன்னந்தனி யாக அங்கே தாங்கிடுவா ரின்றி என்னமாய்த் தான் நிற்கிறதோ என்றனக்குச் சொல்வாய்!