பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நாச்சியப்பன் தாமரை அரியணைக் கேகி அரசியல் பற்றி விரிவுற அமைச்சர்கள் விளம்பிய அனைத்தும் கேட்கும் காலை வேட்கை" என்போன் பூவனை யணுகிப் புகன்றனன் மாதோ! 'அரசே! அரசே! பூக்களின் அரசே! விரைவில் என்றன் வேண்டுகோள் கேட்டு மலரினத் தரச மங்கை யொருத்தியைத் தருதல் வேண்டும், ஏனெனிற் புவியில் "காதல்’ என்னுமென் கண்மணி கோயிலில் பொருதிய தொருபோர் புலவர்க் குள்ளே! ஒருவர் மதிப்புடன் "உரோசா தானும் தூய அல்லிபோல் ஆயதில் லென ஒருவர் மறுப்பார் உண்மையில் இங்கே, விருப்பம் கவர்ந்ததோ வெள்ளிய அல்லியும்?" இவ்வா றெழுந்த இசைப்போர் தன்னைத் தடுத்துடன் நிறுத்தத் தக்க விதத்தினில் உரோசாப் பூவின் கவர்ச்சியும், அல்லியாள் பெருமிதத் தோற்றமும் பிணைந்த ஒரு பூத் தருமா றுன்னடி தன்னிற் பணிந்தேன்' என்றதும் பூவன், 'எந்நிறத் தம்மலர் இருத்தல் வேண்டும் விருப்பினைப் புகல்'கென, "உரோசாச் செம்மை! ஒ! ஒ! வேண்டாம் அல்லியின் வெண்மை! அதுவும் வேண்டாம் இரண்டிலும் தரு'கென இணையடி தொழுதனன் பூவனும் மகிழ்வாய்ப் புன்னகை தோய்தரும் வாய்மலர் விரித்து, 'வருக, வருக, கொள்க இம் மங்கையைக் கொள்க' என்றே பாவலர் இசைப் போர் பார்விட் டோடத் தாமரை என்னும் மாமலர் தன்னைக் கோமக ளென்னக் கொடுத்தன ளுமே! -(ஆங்கிலக் கவி ஒன்றின் தழுவல்)