பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாச்சியப்பன் படுத்தி ருக்கும் மனித ருக்கும் வியர்த்துக் கொட்ட வைத்தாய்" இவ்வடிகள் நாமெல்லாம் பட்டதைப் படம் பிடிக்கின்றன அல்லவா? சிறிய வயதில் அவளின் வடையையும் பொம்மையையும் பறித்து விளையாடிய பாவலனுக்கு இப்போது பருவ மெய்திய அந்தப் பாவையையே அடைய வேண்டுமென்ற ஆவல் மேலிடுகின்றது. இளமைத் துணிவு எங்கோ ஒடி விடுகின்றது. 'மீசை திருகி நடக்கவில்லை-அந்த மின்னலைத் தாக்கிடும் எண்ணமில்லை ஒசைப் படாமலே கொல்லைவழி-அவள் ஓடி வருவதை யெண்ணி யெண்ணி ஆசைப் பட்டிங்கு வாடுகின்றேன்-அவள் அருட்கண் பார்வையை நாடுகின்றேன் பாசங் கொண்டேன் இச்செய்தியினை-அந்தப் பாவைக் குரைத்திட வேண்டுமடா?* (153) என்று பாடுகிறார். நமக்கும் "ஐயோ பாவம்' என்று இரங்கத் தோன்றுகின்றது. திருமண வாழ்த்து’ எனும் பாடல் (158) எல்லா மணமக்களுக்கும் உரிய பொது வாழ்த் தாக, என்றும் எவரும் பாடும் சிறப்பு வாழ்த்தாக அமைத் துள்ளது; நாம் கூட அதனைத் திருமண வாழ்த்தாக எழுதி விடுக்கலாம், வாழ்த்தி மகிழலாம். நெஞ்சங் கவர்ந்த தலைவர்களைப் போற்றிப் பாடுதல் தொன்று தொட்டு வழங்கும் நெறி, அந்நெறியில், பாரதி யார், பாவேந்தர், பெரியார், அண்ணா ஆகிய தலைவர் களை ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களில் நிலைநிறுத்தியுள் ளார். கனக கப்புரத்தினம் பாரதிக்குத் தாசனானது எவ்வாறு பொருந்தும் என வினா எழுப்பி அதற்கு வி.ை