பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 111 எரிக்கும் வெயில் எரிக்கும் வெயிலே எரிக்கும் வெயிலே எத்தனை துன்பம் உன்னலே! சிரித்து வெளியில் திரியும் சிறுவர் தெருவில் வராமல் செய்தாயே எரிக்கும் வெயிலே எரிக்கும் வெயிலே எத்தனை துன்பம் உன்னலே எடுத்து வைக்கும் அடியில் சுட்டாய் தலையும் கொதிக்க வைத்தாய் படுத்தி ருக்கும் மனித ருக்கும் வியர்த்துக் கொட்ட வைத்தாய் வெப்பு நோய்கள் தொத்து நோய்கள் வீடு வீடாய்ப் பரப்பக் குப்பை மேட்டுப் புழுதிக் காற்றும் கூடக் கொண்டு வந்தாய் குடிக்கும் தண்ணிர்க் குளத்து நீரும் கொஞ்ச மாக வற்ற படிக்குப் படி பொன் அரிசி விற்கும் பஞ்சம் கொண்டு வந்தாய் எரிக்கும் வெயிலே எரிக்கும் வெயிலே எத்தனை துன்பம் உன்னலே!