பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நாச்சியப்பன் மரக்கலத்துச் சரக்கெல்லாம் கூடைமுத்துக்கு ஈடாகாதே! பொங்கி யெழுந்து பொருமி வீழ்ந்தே அங்கு மிங்கும் அலையும் கடலில் பாய்மரம் விரித்துப் பல்கலம் செலுத்தி மேய வாணிகர் மேலை நாட்டினர் நீர்வழி நேர்ந்த நினைப்பருந் துன்பமும்: சோர்வும், களைப்பும் துறந்தவ ராகிச் செந்தமிழ் நாட்டுத் துறைமுகம் சேர்ந்து தந்தம் மனத்தினில் தழைத்து வளர்ந்த இன்பக் கனவெலாம் எய்தினே மென்று சிந்தை களித்துச் சிரித்த முகத்துடன் கரைவரும் நேரம் காரிகை யொருத்தி திரைகடல் அடியில் தேடி பெடுத்த ஒளிசேர் முத்துக் கூடை தூக்கி - வழிமறித் தனள்ே, வாணிக ஞெருவனே. அவனே, கூடை முத்தில் கோடிக் கதிர்கள் ஒடிப் பெருகும் ஒளியைக் கண்டான்! கையில் எடுத்தவள் காட்டும் மாலையில் செய்ய தாமரைச் சிவப்பொளி யேறிப் பாய்ந்து முத்தைப் பவழ மாக்கும் மாயச் செயலின் மாண்பினைக் கண்டான்! காவிக் கண்கள் காட்டும் ஒளியும்