பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 113 மேவிய செவ்வாய், முல்லைப் பல்லும் கண்டு கண்டவன் திகைத்துப் போனன். ஒண்டொடி தூக்கி யோடி வந்த கூடை முத்தோ கோடிப் பொன்பெறும். தேடி யெடுத்த செங்கை மாலையின் கொள்மதிப் பென்ன? கோவை யிதழிடை வெள்ளொளி முத்தின் விலைமதிப் பென்ன? மரக்கலத் துள்ள சரக்குகள் யாவும் விலைப்படக் கிடைக்கும் தலைப்பொன் காடுசலாம் முத்து வாங்கவும் பற்ரு தென்ருல், இரத்தினம் வாங்குதற் கேது செய்வேன்? வயிரமும் மணியும் வாங்கு வதற்கும் பயிர் நவ தானியப் பண்டங் கொள்ளவும் தந்தமும் அகிலும் சந்தனப் பொடியும் சுந்தரப் பூந்துகில் ஆடையும் பிறவும் வாங்குதற் கென்ன வழியென எண்ணி ஆங்கு மலைத்துநின் றதிசயித் தனனே! நா. 8