பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தாச்சியப்பன் கண்கள் கண்டேன் பன்னீர்ப்பூக்கள் கொட்டிக் கிடக்கும் செம்மன் பார்த்ததுபோல் அவள்வாயும் பல்லும் பார்த்துச் இன்னேரம் நின்றிருந்தேன், அவளும் என்னைச் செற்றழித்தல் போல்பார்த்தாள். கொல்லும்கண்ணுள்! எந்நேரம் பார்த்தேன்.என் றறியேன் சற்றே இடம்விட்டுப் பெயர்ந்தேன் என் உள்ளம் மானின் நன்னேக்கம் நாடிற்றுத் திரும்பிப் பார்த்தேன். நடுங்கினேன் கூற்றமெனும் கண்கள் கண்டேன். நீராடித் தோழியர்கள் சூழ வந்தாள் நீலமயில் போல், கூந்தல் பின்அலைய நேரோடி என்கண்கள் அவளைக் கண்டு நிஎன்ன சொல்கின்ருய் விருப்ப முண்டா? கூறேடி எனவினவக் கோபம் கொண்டு கொஞ்சுமெழில் முகத்தைமிகு செந்தீ யாக்கிப் போராடி வாவென்றே என்றன் பக்கம் போக்கிவிட்ட வேல்போலும் கண்கள் கண்டேன். பூங்கொடியாள் அவள்தலையில் மலர்ந்திருந்த பூங்கொத்தில் ஒன்றெடுத்து முத்த மிட்டேன். பாங்கியரு கிருந்ததைநான் மறந்து விட்டேன் பாவைமுகம் தீயாகி உயிரை எல்லாம் வாங்கிவிடும் நஞ்சாகி என்றன் பக்கம் வந்தபொழு துன்னமெலாம் பட்ட பாடு பாங்கிஎழுந் தகன்றபொழு தகன்று போகப் பரிந்தென்னைப் பார்த்தமலர்க் கண்கள் கண்டேன்!