பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 115 பாராமற் போனுள் நடையழகி நீரெடுக்கச் செல்லும் நேரம் நான்கணித்த படிசென்று குளக்க ரையில் இடைகுலுங்க இடதுகையில் குடம் குலுங்க எடுத்தடிவைத் தடிவைத்தென் உளம் குலுங்க படைக்கண்கள் நாற்றிசையும் பாய்ச்சி வந்த பாவையைநான் பார்த்துவிட்டேன். எனினுமந்தக் கடைக்கண் என் பால்திரும்ப வில்லை என்னைக் கண்னெடுத்தும் பாராமற் போய்விட்டாளே! சந்தைக்குப் போய்த்திரும்பும் வழியில் சற்றும் சரியாத படிதலையில் கூடை தூக்கிச் சிந்தைக்கு விருந்தான காட்சி என்னச் சேயிழையாள் நடந்துவரல் பார்த்து விட்டேன். முந்திக்கொண் டவளெதிரில் நடந்தேன் காதல் முளையரும்பும் கண்ணிரண்டும் என்னை வந்து சந்திக்கும் என நினைத்தேன் என்னர்வத்தைச் சற்றுமவள் காணுமற் போய்விட்டாளே! கொஞ்சித்தன் தோழியுடன் பேசிக் கொண்டு கோயில்செலக் கருதிவரும் வேளை தன்னில் வஞ்சிவரும் வழிபார்த்துக் காத்தி ருந்தேன். வந்துவிட்டாள்! நானுமவள் அழகைக் கூட மிஞ்சியசெவ் வாய்ச்சிரிப்பைப் பார்த்து விட்டேன்! மிகமகிழ்வைத் தருவாளென் றெண்ணிக் கொண்டு கெஞ்சியன்பைக் கேட்பதுபோல் நின்றேன் கோயில் கீழ்வாயில் தனப்பார்த்துப் போய்விட்டாளே!