பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நாச்சியப்பன் ஏன் பிறந்தாய்? தொட்டிலிலே கிடந்துவிரல் சுவைத்தின் பத்தைத் தோற்றுவிக்கும் ஊற்றினைஓர் பூவைப் போன்ற கட்டழகைப் பெறவேண்டும் என்றி ருந்தேன் கருதியவா றுன்னைநான் பெற்றெ டுத்தேன் கட்டிஎன்னை முத்தமிட்டுக் களித்த அத்தான் கண்னெடுத்தும் இன்றென்னைப் பார்ப்ப தில்லை வெட்டிவிட்டாய் அத்தானின் உறவை இந்த வினைபுரிய வோமகனே நீபிறந்தாய்? பாலாக்கித் தேளுக்கித் தமிழைப் பேசப் பயில்கின்ற மழலையில்என் இன்பப் பேற்றை மேலாக்கித் தருகின்ற ஒருகு ழந்தை மேதினியிற் பெறவேண்டி உன்னைப்பெற்றேன் தோலாக்கி நரம்பாக்கி எலும்புக் கூட்டின் தோற்றத்தைப் போலாக்கி என்னே முன்னைப் போலாக்கம் இன்றிஎன் அத்தான் வெறுக்கப் புரிந்திடத்தா ைேமகனே நீபிறந்தாய்? மலர்க்கன்னம் விரிவடைய வண்டுக் கண்கள் மகிழ்ந்தொளியை வாரிவிட இடுப்பை விட்டுக் குலுக்கென்று தாவிப்போய் வரவ ழைத்துக் கொள்ளுகிற அத்தானின் தோளிற் சேரும் இலக்கியத்தைப் பெறவேண்டும் என்றி ருந்தேன். என்னுவல் தீரஉனைப் பெற்றெ டுத்தேன். விலக்கினையே அத்தானை என்னை விட்டு வினையிதனைச் செய்திடவோ நீபிறந்தாய்?