பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 117 மாலேயில் வா கல்லூரிப் படியேறக் கால்வைக் குங்கால் கலீரென்னும் சிலம்பொலியைக் கேட்டு ளத்தில் பல்லூறும் உமிழ்நீர்போல் இன்பம் ஊறப் பாவையுன தெழில்வெள்ளம் பருகுங் காலை வல்லூருய் மணியடித்து விலக்கிற் றன்றே வாய்த்திருந்த தல்நேரம் நீங்கிற் றன்றே சொல்லூற்றில் தேன்கலக்கும் சுவையே நல்மாஞ் சோலையிலே தடையில்லை மாலையில் வா! வரும்போதும் போம்போதும் கண்ணுற் பேசி வளருகின்ற காதலிலே காணும் இன்பம் குறும்பாக மாணவர்கள் நம்மைக் கண்டு குழறுகின்ற மொணமொணப்பைக் கண்டபின்னர் விரும்பாத பிரிவினையைக் கண்டோமன்றே விழைகின்ற கண்ணின்பம் நீங்கிற் றன்றே கரும்பான மொழிமங்காய்! தடையில் மைாஞ் சோலையிலே களிப்புறலாம் மாலையில்வா! கண்மட்டும் தழுவுகின்ற இன்பந் தானே காதலுக்கு வித்தென்று சொல்வ ரேனும் எண்ணத்தில் வளர்ந்துவிட்ட காத லாலே எடுத்துன்ன்னத் தழுவிவிடத் துடித்து விட்டேன். பண்பட்ட அழகுருவே என்னுள் ளத்தில் படிந்திருக்கும் சுவைப்பாட்டே, தடைப் படுத்தும் கண்கெட்டார் இல்லாத மாஞ்சோ லைக்குக் கதிர்சாய்ந்து சிவக்கின்ற மாலையில்வா!