பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 15 வழங்கும் பாவலரின் திறம் பாராட்டத் தக்கது. மறை மலையடிகள், கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் சம்பத்து, தம்பிக் கோட்டை கணபதி முதலியோரையும் பாட்டில் நிறுத்தும் பாங்கு மனங்கொளத்தக்கது. நாவலர் நெடுஞ்செழியனைக், 'கோவேந்தர் பாண்டியரைக் கொண்ட திருவுருவம்! நாவேந்தர் அண்ணாவின் நம்பிக்கைப் பேரிமயம்; பாவேந்தர் பாராட்டும் பைந்தமிழின் பொற்பேழை! மூவேந்தர் பண்பும் முதிர்ந்த நெடுஞ்செழியன்! எந்தை பெரியார் எழிற்கருத்தைக் கேட்போரின் சிந்தை பதியத் தெருத்தோறும் பாய்ச்சிவரும் மைந்தன்: இளந்தாடி என்னும் மணிப் பெயரன் நிந்தைக் கிளையா நிமிர்தோள் நெடுஞ்செழியன்!” (230) எனவும், ஒளவை சண்முகத்தை, - 'கற்றவரைப் பின்பற்றும் கலைஞன்; நல்ல கவிஞர்களைப் போற்றுகின்ற சுவைஞன்; தன்னைப் பெற்றவரைத் தவம்பெற்றார் ஆக்கி விட்ட பெருமைந்தன்; தழிழன்னை பெற்ற செல்வன்; உற்றபெருந் தலைவர்கட்கு நிதி வழங்கும் ஒருவள்ளல்; கூத்தியலாம் தமிழ்க்க லைக்கு வற்றாத ஊற்றனைய களஞ்சியம்போல் வளஞ்சுரக்கும் சண்முகத்தை வாழ்த்தாய் நெஞ்சே! (232) எனவும் படம் பிடிக்கும் பகுதிகளை நம் பாராட்டு பிடித்துக் கொள்கின்றது. இவ்வாறு தலைவர்களைப் போற்றும் இவர், "கோவையிலே ஒருபெண்ணைக் காத லித்துக் கூடலிலே ஒருத்தியுடன் மணம்மு டித்துத்