பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 119 காட்ட வில்லை கணக்கெழுதப் போய்ச்சேர்ந்தேன் அவரிடத்தில் கணக்கனெனும் முறையில்அவர் வீட்டி லுள்ள பணக்குவியல் அத்தனையும், அவற்றைப் பற்றிப் பதிந்திருக்கும் குறிப்பேடு பேரே டெல்லாம் கணக்கின்றிக் காண்பித்தார் எனினும் ஒன்றைக் காட்டவில்லை இருந்தும்அவர் காட்ட வில்ல்ை மணக்குமலர்க் குழலி அவர் பெற்றெ டுத்த மங்கையைத்தான் என்எதிரில் காட்ட வில்லை! நாளிருக்கும் கணக்கறையைப் பணமிருக்கும் நடுவீட்டை, உள்ளறையை, அவர் தனித்துத் தானிருக்கும் சிற்றறையை, விருந்துவந்து தங்குகின்ற கூடத்தை எல்லாம் பார்த்தேன் தேனிருக்கும் செந்தமிழில் சொல்லி ருக்கும் திருவாயைக் கொண்டிருக்கும் நுண்ணிடையாள், மான் இருக்கும் அடுக்களேயை நெய் மணக்கும் மணவறையைத் தானெனக்குக் காட்ட வில்லை! காட்டவில்லை ஆலுைம்கண்டு கொண்டேன் மங்கையவள் வாட்டடங்கண் கண்டு மயலானேன்-தேட்டார் குடிப்பிறந்த காதலியைக் கொள்ளையிட்டென் வீட்டுக் கடித்துவரத் திட்டமிட்டேன் யான்.