பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நாச்சியப்பன் தெரிந்து கொண்டேன் பாய்வதற்குக் காத்திருக்கும் புருவைப் போலும் பார்வைகண்டு காமமெனும் நோயில் வீழ்ந்தேன்! தாயஉளத் தாளென்றன் துடிப்பு நீக்கத் துணிந்திடுவா ளோஅன்றிக் காத்தி ருந்து மாயவிடு வாளோஎன் றெண்ணி எண்ணி மணக்கவலை கொண்டிருக்கும் போதில் என்மேல் பாய்ந்துவரும் மலர்க்கண்கள் கண்டேன்! அந்தப் பாவை இனி எனக்கென்று தெரிந்து கொண்டேன்! தனிவழியில் ஒருநாளென் எதிரில் வந்தாள் தாங்காத உளத்தோடு முகத்தில் இன்பம் தனத்தேக்கிப் பார்த்தேன்.என் உள்ளரங்கம் தனிலிருக்கும் உயிர்போன்ருள் தல்ை குனிந்தாள்! எனதிருகண் வேருென்றைப் பார்த்தல் போல எடுக்கும் நொடி எனநோக்கிப் புன்ன கையைக் கனிவாயில் தேக்கிடுதல் கண்டேன்! அந்தக் கன்னணியினி எனக்கென்று தெரிந்து கொண்டேன்! திருநாளில் வருமக்கள் கூட்டந் தன்னில் தேன்மொழிவாய் மலர்க்கண்ணுள் இடையிருந்தாள் ஒருபார்வை என்மனத்திற் குறுதி சொல்ல உடனனுப்பி வைப்பாளென் றெண்ணி நின்றேன் ஒருபோதும் எனப்பார்த்த தில்லாள் போல உடன்பார்த்தாள் பிறரறியா வண்ணம் என்னிற் பொருந்திவிட்ட இருகண்கள் கண்டேன்! அந்தப் பூவையினி எனக்கென்று தெரிந்து கொண்டேன்!