பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 121 அவர் போக்கு நறுமலர்கள் குழல்சூடிப் படுக்கையறை சென்று நடுச்சாமம் வரைகாத்துக் கொண்டிருப்பேன் அவரோ உறங்காமல் நமக்கொருத்தி காத்திருப்பாள் என்றே உளம்வருந்திக் கதிர்சாயும் முன்வீடு தேடிப் பறந்துவந்த காலமெல்லாம் பறந்ததடி இந்தப் பாழ்இரவும் அன்னநடை போடுதடி! நெஞ்சில் பிறமாதர் தமைத்தழுவிப் பேரின்பம் என்ன பெற்ருரோ நானறியேன் அவர்போக்குச் சரியோ? பால்காய்ச்சிச் சீனியிட்டுப் படுக்கையறை சென்று படுத்துறங்க மனமின்றிக் காத்திருப்பேன். செங்கண் வேல்பாய்ச்சி வழியிற்போம் ஆடவர்கட் கெல்லாம் விழைவெழுப்பி உடல்விற்றுக் காதவியர் நெஞ்சில் வேல்பாய்ச்சுங் கன்னியரைத் தேடிப்போய்க் கூடும் வெறிகொண்டார்; வேதனையைத் துணையாக்கி விட்டார்! பால்றிலவும் கதிர்பாய்ச்சிச் சிரித்ததடி உள்ளம் பற்றிக்கொண் டெரியுதடி அவர்போக்குச் சரியோ? பாய்விரீத்துப் பணம்பறிக்கும் வல்லியர்பால் இன்பம் பார்க்கின்ற என்னத்தான் எனை மறந்தார் இங்கே பூவிரித்த மெத்தையிலே நானிருந்தும் தனிமை பொறுக்காமல் துடிப்பதனை அறியாரோ? நாளும் வாய்விரித்துப் பல்காட்டி வாசலிலே நின்று வருகின்ற ஆடவரைக் கூடியின்பங் காணும் பேய்மகளிர் துணையாளுர்; வேதனைதான் இந்தப் பேதைக்குத் துணையென்ருர் அவர்போக்குச் சரியோ?