பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நாச்சியப்பன் பொறுத்திருப்பாய் பொன்னழகே நின்முடங்கல் பெற்ற பின்னர் பொறுமையில்லை; எனினும்உறை கிழித்துப் பார்க்கத் தெம்புமில்லை; முதலாளி முகத்த மைதி தெரியவில்லை; பொழுது விரைந் தேக வில்லை! இன்பமது கைக்குவந்தும் எடுத்த ருந்த ஏற்றஇடம் கடையல்ல, எனினும் உள்ளம் உன்னையெண்ணிப் பறந்தோடும் நிலையில் என்றன் உடலையொரு சிலையாக்கிக் கடையில் வைத்தேன்! கடைதந்த விடுதலையைக் களித்துப் பெற்றுக் காவிரியின் கரைவந்து படிக்க லானேன். மடைதிறந்த வெள்ளமெனச் சுவைப்பெ ருக்கை மாந்திவிட்டேன் இன்பமெனும் கரையில் நின்றே! அடைந்திருக்கும் நின்காதற் பேற்றை யெண்ணி அகமகிழ்ந்தேன்; என்னைவர வேற்று நீயே படைத்திருக்கும் தமிழமுதைப் பருகி விட்டேன். பண்பாடும் மடநங்காய் என்சொற் கேளே! நின்னிடத்திற் பறந்துவர வேண்டு மென்ற நினைப்பிருந்தும் செயலில்லை, பறப்பதற்கோ என்னிடத்திற் சிறகில்லை, வைய வாழ்வை இனிமையுற நடத்தவ்ழி என்ன வென்ருல், பொன்னிடத்தில் நாட்டத்தைப் போக்க லன்ருே? பொறுத்திருப்பாய் ஒருதிங்கன்! பொன்னும் நானும் உன்னிடத்தில் சேர்கின்ருேம்; படும் பாடெல்லாம் உனக்காகத் தானேடி கன்னற் பாகே!